தமிழ்மழை – Tamil-Dews

கோசர்

வலம்புரி கோசர் அவையில் அழும்பில் அடங்கவில்லை. (அழும்பில் எனபவன் தற்போது திருச்சி மாவட்டத்திலுள் அன்பில் பகுதியின் அரசன்) \6\புறம் 283

இளங்கோசர் வாழ்ந்த செல்லி (செல்லூர்) அரசன் ஆதன் எழினி. இவனது மார்பில் குத்திய யானை தன் கொம்பு ஒடிந்து துன்புற்றது. செல்லி முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முந்நில வளங்களைக் கொண்டது. \377\அகம் 216

நாலூர்க் கோசர் ஆலமரத்தடியில் அமர்ந்து இறை (வரி) தண்டினர். \625\குறுந்தொகை 15

பல்வேல் கோசர் அஃதை அரசனைப் போற்றி அவனுக்குப் பாதுகாவலராக இருந்தனர். ஆண்யானைகளை வசப்படுத்தும் பெண்யானைகளைப் பேணிவந்த மக்கள் கூட்டத்துத் தலைவன் இந்த அஃதை. நெய்தலஞ்செறு இவன் நாடு. \1007\அகம் 113

இளம்பல் கோசர் பிட்டங்கொற்றனைத் தாக்கினர். கோசர் படையெடுத்து வந்து தாக்கியபோதும், தான் படையெடுத்துச் சென்று கோசரைத் தாக்கியபோதும் பிட்டங்கொற்றன் தன் படை பின்னே வரத் தான் முன்னே நின்று போரிடுவான். \1087\புறம் 169

வாய்மொழிக்கோசர் நாட்டை அடைய விரும்பிய ‘பெரும்பூண் கிள்ளி’ கோசர் நாட்டுக்கே சென்று அவர்களது படையைத் தூள் தூளாக்கினான்.  \1355\அகம் 205

நன்னனின் காவல்மரம் மா. இந்த மரத்திலிருந்து விழுந்த மாம்பழம் ஒன்று ஆற்றுநீரில் மிதந்து வந்தது. நீராடிய கோசர் குடிப் பெண்ணொருத்தி அதன் வரலாற்றை அறியாது எடுத்துத் தின்றுவிட்டாள். (பழத்தை எடுத்து அரசனிடம் கொடுக்க வேண்டும் என்பது நியதி வழக்கம்) அதனைத் தின்றதற்காக அரசன் நன்னன் அவளுக்குக் கொலை தண்டனை விதித்தான். அவளது சுற்றத்தார் அரசனிடம் குறை வேண்டினர். குற்றத்துக்குத் தண்டமாக அவளது எடைக்கு எடை தங்கமும், 81 யானைகளும் தண்டமாகத் தருவதாகவும், பெற்றுக்கொண்டு அவளை விடுதலை செய்யுமாறும் வேண்டினர். மன்னன் நன்னன் ஏற்றுக்கொள்ளவில்லை. கொலைதண்டனையை நிறைவேற்றிவிட்டான். இதனால் இவனைப் பெண்கொலை புரிந்த நன்னன் என்றே வழங்கலாயினர். \குறுந்தொகை 292

கோசர் தந்திரமாகப் போரிட்டு நன்னனின் மாமரத்தை வீழ்த்தினர்.  \ குறுந்தொகை 73

அன்னி மிஞிலியன் வேளிர்குடித் தலைவன். அன்னி மிஞிலி என்பவள் அன்னி மிஞிலியனின் தங்கை. ஒன்றுமொழிக் கோசர் இவர்களின் தந்தையாருடைய கண்ணைத் தோண்டி எறிந்துவிட்டனர். அந்தக் கோசர்கள் அனைவரையும் கொன்று மிஞிலியன் பழிதீர்த்துக் கொண்டான். \1537\அகம் 196

அன்னி மிஞிலியின் தந்தை மாடு மேய்த்துக்கொண்டிருந்தான். அவன் அயர்ந்திருந்தபோது மாடுகள் கோசர் வயலில் விளைந்திருந்த வரகை மேய்ந்துவிட்டன. அதற்குத் தண்டனையாகக் கவனிக்காமல் அயர்ந்துவிட்ட கண்ணை ஊர்முது கோசர் தோண்டிவிட்டனர். தந்தைக்கு இழைத்த கொடுமைக்கு நீதி வேண்டி மகள் பாடுகிடந்தாள். உண்ணா நோன்பு மேற்கொண்டாள். உடுத்த ஆடைக்கு மாற்று ஆடை அணியாமல் சினம் கொண்ட நிலையிலேயே இருந்தாள். அக்காலத்தில் அண்டை நாட்டில் செலவாக்குப் பெற்ற அரசனாகத் திகழ்ந்தவன் திதியன். திதியனிடம் முறை வேண்டினாள். அவனும் படையுடன் வந்து கண்ணைத் தோண்டிய கோசர்கள் அனைவரையும் கொன்றான். அன்னி மிஞிலி சினம் தணிந்து மகிழ்ச்சியில் திளைத்தாள்.\1546\அகம் 262

ஒன்றுமொழிக் கோசர் நன்னனின் மாமரத்தை வெட்டிச் சாய்த்தனர். பின்னர் நடந்த போரில் நன்னனை நாட்டை விட்டே துரத்திவிட்டனர். \1561\குறுந்தொகை 73

கருங்கண் கோசர் வாட்காயம் பட்டு ஆறிய வடு கொண்ட முகத்தினர். அவர்களின் ஊர் செல்லூர். அவ்வூரில் புகழ் பெற்ற கோயில் ஒன்று இருந்தது. அவ்வூருக்குக் கிழக்கில் கடல் இருந்தது. \2027\அகம் 90

மோகூர் அரசன் பழையன். அவன் அவையில் ‘நான்மொழிக் கோசர்’ இருந்தனர். 4 மொழிகளில் பேச வல்லவர் நான்மொழிக் கோசர். இவர்களை மொழிபெயர்ப்பாளர்கள் எனலாம். தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் அவையில் பழையன் அவையில் இருந்தது போல நாற்பெருங்குழு இருந்தது. \2112-509-773\மதுரைக்காஞ்சி

மனைக் கோசர் என்போர் ‘வாட்டாற்று எழினி ஆதன்’ நாட்டில் ‘கொளை’ என்னும் வாய்த்தாளம் போட்டுக்கொண்டு குரவை ஆடி மகிழ்வித்துவந்தனர். ‘நனைக்கள்’ (தேன்கலந்த கள்), ‘தீந்தேறல்’ (பனைநீரில் தேற்றப்பட்டது), ‘நறவு’ (நறுக்கிப் போட்ட பட்டைகளால் மண்ணுக்குள் விளைந்தது) ஆகியவற்றை உண்டு அவர்கள் குரவை ஆடினர். \2118\புறம் 396

செம்மல் கோசரின் தாயகம் துளுநாடு. அவர்கள் ‘பெரும்பூண்’ (கைக்காப்பு) அணிந்திருந்தனர். அந்த நாட்டுக்குச் செல்லும் புதியவர்கள் வறுமை நிலையினர் ஆயினும் அவர்களைப் பேணிப் பாதுகாப்பது கோசர்களின் பழக்கம். \2123\அகம் 15

(தலை)ஆலங்கானத்துப் பொதியில் (பொதுவிடத்தில்) போர். கோசர் தேர்படையுடன் சென்று தாக்கினர். மோகூர் (தற்போதுள்ள மோகனூர்) பணியவில்லை. கோசருக்குத் துணையாக வம்ப மோரியர் வந்தனர். மோரியரின் தேர்ச்சக்கரம் உருள்வதற்காகக் கோசர் வழியமைத்துத் தந்தனர். தமிழர் பொருள் தேடச் செல்லும்போது அந்த வழியைப் பயன்படுத்திக் கொண்டனர். \2138\அகம் 251

Advertisements

Leave a Comment »

No comments yet.

RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: