தமிழ்மழை – Tamil-Dews

2010/03/12

Hello world! சான்றோர் பெருமக்களே

Filed under: Uncategorized — பொதுவன் அடிகள் sengai podhuvan செங்கைப் பொதுவன் @ 5:15 am

தமிழ் நமக்குப் பெய்யும் மழை. முன்னோர் பெய்த சங்க இலக்கிய மழையில் நனைந்த அடியேன் அவர்களின் வாழ்க்கையையும் வரலாற்றையும் எண்ணிப் பார்க்கிறேன். அவர்களது வாழ்க்கையில் தென்படும் பண்பாட்டையும், நாகரிகத்தையும் பதப்படுத்திப் பயன்படுத்திக்கொள்ளலாமே என்று உலகுக்குப் படையலாக்குகிறேன்.

விருந்து படைத்தலை வேள்வி என்கிறார் திருவள்ளுவர். பார்ப்பனப் புலவர் பாலைக்கௌதமனார் கூட வந்தவர்களுக்கெல்லாம் உணவு வழங்குவதை ‘அடுநெய் ஆவுதி’ என்கிறார். இங்கு நம் முன்னோரின் தமிழ்விருந்து பதப்படுத்திப் படைக்கப்படுகிறது.

தமிழ் உலகம் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறேன். | பொதுவன் அடிகள்

3 Comments »

  1. பேரன்புடை அடிகளாருக்கு வணக்கம் !
    ஆங்கில வழிக் கல்வியினால் இன்ன பிற காரணிகளால் தமிழ் ஆங்கிலம் கலந்த சூழலில் தொண்ணூறு விழுக்காடு ஆங்கிலமும், மீதி பத்து விழுக்காடு தமிழை ஒத்த மொழியையும் வெகு மக்கள் ஊடகங்கள், குறிப்பாகத் தொலைகாட்சி நிறுவனகள் பரப்பி வரும் இதே வேளையில், சங்க இலக்கிய மழையில் நனைந்த தங்களைத் தமிழ்த்தாய் தட்டி எழுப்பி எங்களையும் அம்மழையில் பொதுவாக நனைக்க உதவுங்கள் பொதுவன் அடிகள் அவர்களே! என நாங்களல்லவா வேண்டுகிறோம் !

    தசை கோ.கண்ணன்

    Comment by கோ.கண்ணன் — 2010/12/31 @ 6:42 am | Reply

  2. பொழியட்டும் தமிழ்மழை ! நனையட்டும் தமிழுலகம் அம்மழையால் ! காலத்தால் நிலைத்த பணி !
    வாழ்க ! தொடரட்டும் இப்பணி ! பேரறிவாளன் திரு அனைவர்க்கும் கிட்டட்டும் !

    Comment by தஞ்சை கோ.கண்ணன் — 2012/05/03 @ 1:11 am | Reply


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a comment

Blog at WordPress.com.